ஆசிரியர்கள் பற்றாக்குறை; பள்ளியின் முன்பு மாணவர்கள் போராட்டம்
சத்தியமங்கலம் அருகே பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் மற்றும் பொற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளி 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறானர்.
இந்த பள்ளியில் தற்போது 2 ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்தி வருகிறார்கள். மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.
இந்த நிலையில் இரண்டு ஆசிரியர்களில் ஒரு ஆசிரியர் பதவி உயர்வு பெற்று பணி மாறுதல் பெற்று செல்ல உள்ளார். இதனை அறிந்த பெற்றோர்கள் தனது குழந்தைகளுடன் வந்து பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த உதவிக் கல்வி அலுவலர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழந்தைகளின் பெற்றோரிடம் பேச்சு வார்தை நடைத்தினர். பின்னர் விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து பொற்றோர்கள் தனது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story