விவசாய நகைக்கடன் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
விவசாய நகைக்கடன் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த லிங்கராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலின்போது, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 5 பவுன் வரை விவசாய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் கடந்த நவம்பர் 1-ந்தேதி விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. இது அரசுக்கு கூடுதல் சுமையாகவே அமையும். கூட்டுறவு வங்கிகளில் நகையை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் கூட்டுறவு வங்கி இல்லாததால், பலர் பொதுத்துறை வங்கிகளிலேயே தங்களது நகையை அடகு வைத்துள்ளனர். அதோடு, வட்டியை முறையாக செலுத்தாதவர்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை முறைகேடுகள் தொடர்பாக ஏராளமான புகார்களும் உள்ளன. எனவே, 5 பவுன் விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story