தமிழக அரசின் சேமிப்பு கிடங்குகள், ரேஷன் கடைகளில் முறைகேடு ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தமிழக அரசின் சேமிப்பு கிடங்குகள், ரேஷன் கடைகளில் முறைகேடு நடைபெறுவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை,
அனைவருக்கும் உணவு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்குமான பொது வினியோக திட்டத்தை செயல்படுத்துவதில் ரேஷன் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் ஆகியவை முக்கிய பங்காற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
உணவு பாதுகாப்பின் அங்கங்களாக திகழும் இவற்றில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வருகின்றன.
கள்ளச்சந்தையில் விற்பனை
தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கியவுடன் அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு, என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டன என்ற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன. ஆனால், வாங்கப்படாத பொருட்களும் வாங்கப்பட்டதாக குறுஞ்செய்திகள் வருவதாக குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன.
வாங்கப்படாத பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
கோடிக்கணக்கில் இழப்பு
இதேபோன்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற பொருட்கள் அனுப்பப்படுவதாகவும், அவ்வாறு அனுப்பப்படும் பொருட்களின் ஒவ்வொரு மூட்டையிலும் குறைந்தபட்சம் 2 கிலோ எடை குறைவாக இருப்பதாகவும், அதாவது, மாதா மாதம் 15 ஆயிரம் டன் தானியங்கள் குறைவாக வினியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமும் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.
எனவே, இதில் முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு, நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குகளிலும், ரேஷன் கடைகளிலும் நடைபெறும் முறைகேட்டை உடனடியாக தடுத்து நிறுத்தி, சரியான எடையுள்ள பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story