யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Feb 2022 1:52 PM IST (Updated: 10 Feb 2022 1:52 PM IST)
t-max-icont-min-icon

யூடியூபர் மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டள்ளது

மதுரை

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வீட்டின் முன்பு கோலம் போட்ட விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டு திமுகவை களங்கப்படுத்தியதாக தூத்துக்குடி  திமுக மாணவர் பிரிவை சேர்ந்த உமரி சங்கர் என்பவர் தூத்துக்குடி கோர்ட்டில் மாரிதாஸ் மீது வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று யூடியூபர் மாரிதாஸ் தரப்பில் இருந்து மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல்  செய்யப்பட்டு இருந்தது. 

இந்த மனு  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.


Next Story