திருவாரூர்: சுற்றுவட்டாரப் பகுதியில் மழை


திருவாரூர்: சுற்றுவட்டாரப் பகுதியில் மழை
x
தினத்தந்தி 11 Feb 2022 9:17 AM IST (Updated: 11 Feb 2022 9:17 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த தீடீர் மழையால் சம்பா பயிர்களின் அறுவடை பணிகள் முடங்கியது உள்ளது.

நன்னிலம்

திருவாரூர் மாவட்டம்  நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒருமணி முதல் லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று  4 மணி முதல் மிக கனமழையாக பெய்த்  தொடங்கியது.  

தற்போது நன்னிலம் சுற்றுவட்டார பகுதில் சம்பா பயிர்களின் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது பெய்த இந்த தீடீர் மழையால் அறுவடை பணிகள் முற்றிலுமாக முடங்கி உள்ளது.  செங்கல் சூளை பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மழையால் அப்பணியும்   பாதிக்கப்பட்டு உள்ளது.

3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மழையால் வயல்களில் நீர் தேங்கி நிற்கின்றது. தொடர்நது மழை நீடித்து வருவதால் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story