திண்டிவனம்: தொடர் திருட்டு வழக்கில் தந்தை-மகன் கைது


திண்டிவனம்: தொடர் திருட்டு வழக்கில் தந்தை-மகன் கைது
x
தினத்தந்தி 13 Feb 2022 9:50 AM IST (Updated: 13 Feb 2022 9:50 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுவந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம், திண்டிவனம் சுற்றுவட்டார பகுதியில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 

அந்த வகையில் குற்ற செயல்களில் தொடர்புடையவர்ளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை  போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் மயிலம் அருகே மர்ம நபர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மறைந்து இருந்த இரண்டு பேரை கைது செய்தனர். 

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கலியமூர்த்தி(52) மற்றும் அவரது மகன் செல்வக்குமார்(23). என்பது தெரியவந்தது. 

பின்னர் அவர்களிடம் இருந்து 6 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story