பெண் வனக்காவலர் கொலை வழக்கில் குற்றவாளி சரண்
மதுரையில் பெண் வனக்காவலர் கொலை வழக்கில் ஆயுதப்படை போலீசார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மதுரை,
மதுரை சதாசிவம் நகர் பகுதியை சேர்ந்த பொன்பாண்டி மனைவி சரண்யா (வயது27). இவர் தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக் காவலராக பணிபுரித்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கணவர் பொன்பாண்டி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் தனது இரண்டு குழந்தைகளுடன் மதுரையில் உள்ள பெற்றோர் விட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் மதுரை அனுப்பானடியை சேர்ந்த ஆயுதப்படை போலீசார் திருமுருகன்(27) என்பவர் வீட்டில் தனியா இருந்த சரண்யாவை கொலை செய்து விட்டதாக மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கா காரணம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் ஒருவர் கூறுகையில்,
சரண்யாவுக்கும், திருமுருகனுக்கும் திருமணத்துக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கணவன் இறந்த பின்னர் வீட்டில் தனியா இருந்த சரண்யாவை திருமுருகன் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.
திருமுருகன் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் சரண்யாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்று உள்ளார். சம்பவத்தன்று இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று போசிக் கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரச்சனை முற்றியதில் சரண்யாவின் கழுத்தை நெரித்து திருமுருகன் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தள்ளது என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கீரைத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story