காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் களைகட்டும் ரோஜா விற்பனை


காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் களைகட்டும் ரோஜா விற்பனை
x
தினத்தந்தி 13 Feb 2022 7:30 PM IST (Updated: 13 Feb 2022 7:30 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மலர் சந்தையில் 16 வகை வண்ண ரோஜாக்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக வியாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி,

காதலர் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், காதல் ஜோடிகள் அன்பளிப்புகள் மற்றும் பரிசு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் காதலர் தினம் என்றாலே ரோஜா மலருக்கு தனி இடம் எப்போதும் உண்டு. இதனால் காதலர் தினத்தையொட்டி ரோஜா மலர்களின் விற்பனையும் அதிகரிக்கிறது. 

அந்த வகையில் தூத்துக்குடி மலர் சந்தைக்கு இந்த ஆண்டு ஊட்டி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து 16 வகையான வண்ண ரோஜாக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த ரோஜாவின் விலை சராசரியாக ரூபாய் 15 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

அன்பளிப்பு அளிக்கும் வகையில் மலர் கூடைகள், பூங்கொத்துகள் என பல்வேறு விதமாக ரோஜாக்கள் விற்கப்படுகின்றன. இந்த மலர்களை வாங்குவதற்கு ஆன்லைன் மூலமாகவும் அதிக அளவில் முன்பதிவு நடைபெற்று வருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

Next Story