வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால், சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.
திண்டுக்கல்,
சுற்றுலா தலமான கொடைக்கானலில் இன்று வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். தமிழகம் மட்டுமின்று ஆந்திர, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது.
அங்கு இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால், சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். பலர் அங்குள்ள பிரையண்ட் பூங்காவில் அமர்ந்து பொழுதை கழித்தனர். மேலும் படகு சவாரி, குதிரை சவாரி ஆகியவற்றுக்கும் சென்று மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story