மது குடிப்பதை கண்டித்த தாய் குத்திக்கொலை - மகன் வெறிச்செயல்
பூந்தமல்லி அருகே குடி போதையில் பெற்ற தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பூந்தமல்லி,
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மனைவி மல்லிகா (54). இவர்களுக்கு ஜெயபால்( 24)என்ற மகன் உள்ளார்.
கூலி தொழில் செய்து வரும் ஜெயபாலுக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஜெயபால் குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்து கொண்டிருந்தார். இதனை அவர் தாய் மல்லிகா கண்டித்ததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது.
சண்டையை விலக்கி விட்டு இருவரையும் கணவர் ஆனந்தன் சமாதானம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்ப்பட்டு உள்ளது. வாக்குவாம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த ஜெயபால் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் மது போதையில் வீட்டுக்கு வந்து தாயிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
தன்னிலை மறந்து மது போதையில் இருந்த ஜெயபால் ஆத்திரத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மல்லிகாவை குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
பின்னர் சம்பவ இடத்துக்குவந்த வெள்ளவேடு போலீசார் கொலை செய்யப்பட்ட மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜெயபாலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குடி போதையில் பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Related Tags :
Next Story