வாகனத்தில் ஹாரன் அடித்த டிரைவர் மீது தாக்குதல் - போலீசார் விசாரணை


வாகனத்தில் ஹாரன் அடித்த டிரைவர் மீது தாக்குதல் - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Feb 2022 1:50 PM IST (Updated: 14 Feb 2022 1:50 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கடை அருகே சாலையில் நின்றவர்களை விலகி செல்லுங்கள் என்று ஹாரன் அடித்த டிரைவர் மீது தாக்குதல் நடத்திவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த தாஸ் என்பவரது மகன் அஜி மில்டன்(வயது 49). மில்டன் சொந்தமாக ஒரு குட்டியானை வாகனம் வைத்துள்ளார்.

சம்பவத்தன்று மில்டன் புதுக்கடை பகுதியில் இறைச்சி எடுப்பதற்காக தனது வாகனத்தில் சென்றுள்ளார்.  வாகனம் மூன்றுமுக்கு என்ற இடத்தில் வந்தபோது சாலையில் கூட்டமாக சிலர்  நின்றுள்ளார்.

அவர்கள் போக்குவரத்துக்கு இடையூராக நின்றதால் விலகி செல்லுமாறு மில்டன் ஹாரன் அடித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த புதுக்கடை அம்பாள் நகர் பகுதியை சேர்ந்த சத்யன் என்பவர் இரும்பு  கம்பியால் டிரைவர் மில்டனை தாக்கி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த  மில்டன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story