காதலர் தினம் - கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த காதல் ஜோடிகள்


காதலர் தினம் - கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த காதல் ஜோடிகள்
x
தினத்தந்தி 14 Feb 2022 4:35 PM IST (Updated: 14 Feb 2022 4:35 PM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் காதல்ஜோடிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர்.  காதல் ஜோடிகள் கடற்கரையை சுற்றி உல்லாசமாக பொழுதை கழித்தனர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14- ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு பிப்ரவரி 14 -ந்தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

காதலர் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியிலும் இன்று காதல் ஜோடிகள் குவிந்தனர்.

காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும் தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர் . கடற்கரையில் நின்றவாறு காதல் ஜோடிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையின் பின் பகுதியை செல்போன் மூலம் செல்பி  மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் .

காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது கடற்கரை பகுதியில் போலீசார் வலம் வந்தபடி இருந்தனர் .

Next Story