ரவிச்சந்திரனுக்கு 3வது முறையாக பரோல் நீட்டிப்பு..!
ராஜீxவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு மூன்றாவது முறையாக பரோல் நீட்டிக்கபட்டது.
சென்னை,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து 30 நாட்கள் சாதாரண விடுப்பில் வெளியில் வந்த குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு மூன்றாவது முறையாக மேலும் ஒருமாத காலம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவ.11ஆம் தேதி ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோலில் வெளிவந்தார்.
ரவிச்சந்திரனின் தாயார மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் பரோல் வழங்கப்பட்டது.
அவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பநாயக்கன்பட்டியில் தாயார் ராஜேஸ்வரியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் டிசம்பர் 16ஆம் தேதி மாலை மதுரை மத்திய சிறைக்கு வர இருந்த நிலையில் அவரது பரோல் டிசம்பர் 17 மற்றும் ஜனவரி 16ஆம் தேதி என இரண்டு முறை நீட்டிக்கபட்டது.
இன்றுடன் பரோல் முடிவடைய இருந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு மூன்றாவது முறையாக பரோல் நீட்டிக்கபட்டுள்ளதாக சிறைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினரை தவிர மற்ற நபர்களைச் சந்திக்கக் கூடாது, பொதுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story