நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; சென்னையில் தயார் நிலையில் 5,794 வாக்குச்சாவடிகள்


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; சென்னையில் தயார் நிலையில் 5,794 வாக்குச்சாவடிகள்
x
தினத்தந்தி 15 Feb 2022 10:38 AM GMT (Updated: 15 Feb 2022 10:38 AM GMT)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னையில் வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை தயார் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் மொத்தம் உள்ள 200 வார்டுகளுக்கு 5,794 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் இருக்கின்றன. 

சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள 1,139 வாக்குப்பதிவு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க 1,368 சக்கர நாற்காலிகள் தயார்ப்படுத்தப்பட்டு உள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்படும் நிலையில், சென்னையில் வாக்கு எண்ணும் பணிக்காக 15 மையங்களை தயார்ப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story