கோவையில் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரசாரம்


கோவையில் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 16 Feb 2022 2:54 AM IST (Updated: 16 Feb 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவையில் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

கோவை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்து வருகிறார். 

இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) கோவைக்கு வருகை தரும் கமல்ஹாசன், மாலை 4 மணிக்கு கோவையில்காய்கடை பகுதி, புலியகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் தெற்கு தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஓட்டு கேட்டார். வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு அடுத்தபடியாக ஓட்டுகளை பெற்றார். தற்போது கோவையில் அவர் பிரசாரத்திற்கு வருவது, கட்சியினர் இடையே சுறுசுறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story