அ.தி.மு.க.வினர் மேடையில் பேசுவதை கேட்டு அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை - ப.சிதம்பரம் பேச்சு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ப.சிதம்பரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், "அ.தி.மு.க.வினர் மேடையில் பேசும் வசனங்களைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அவர்கள் பேப்பர் படிப்பதையும், தொலைக்காட்சி பார்ப்பதையும் நிறுத்திவிட்டார்கள் போல, அதனால் தான் தி.மு.க. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று கூறுகின்றனர்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி. அவர் முதலில் அரசியல் சாசன சட்டத்தைப் படிக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதெல்லாம் அபத்தமான வார்த்தை.
சட்டமன்றத்தை முடக்க முடியாது. சட்டமன்றம் என்ன ஜல்லிக்கட்டு காளையா அடக்க, ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போல் சட்டமன்றத்தை முடக்க முடியாது.
தமிழகத்தில் 2026- ல் தான் அடுத்த சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அதற்கிடையே சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசுவது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது."
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story