நாகை: பறிமுதல் செய்யப்பட்ட 841 லிட்டர் சாராயம் அழிப்பு
கீழ்வேளூர் போலீசார் பறிமுதல் செய்த 841 லிட்டர் சாராயம் கலால் துறை உதவி ஆணையர் முன்னிலையில் அழிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உற்பத்திக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அந்த வகையில கடந்த 2020-21-ம் ஆண்டு காரைக்கால் மற்றும் வாஞ்சூர் பகுதிகளில் இருந்து 841 லிட்டர் சாரயங்களை கீழ்வேளூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார்,வழக்கின் விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நாகை மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் குணசேகரன் முன்னிலையில பறிமுதல் செய்யப்பட்ட 841 லிட்டர் சாராயத்தை அழிக்க கோர்ட் அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் கேன்களில் இருந்த சாராயத்தினை போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள இடத்தில் குழிவெட்டி அதில் கொட்டி அழிக்கப்பட்டது.
Related Tags :
Next Story