நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட தலைவர்கள்!


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட தலைவர்கள்!
x
தினத்தந்தி 17 Feb 2022 6:27 PM IST (Updated: 17 Feb 2022 6:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

சென்னை, 

தமிழகத்தில் 12 ஆயிரத்து 604 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.நகர்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான பிரசாரம் இன்று மாலை ஓயும் நிலையில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அனல் பறந்தது.

இந்த தேர்தலில் சுமார் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருவதால் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வந்தனர்.அரசியல் கட்சியினருக்கு இணையாக சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் கடந்த ஒரு வாரமாக தாங்கள் போட்டியிடும் வார்டு பகுதிகளில் பம்பரமாக சுழன்று வந்தனர்.

மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏற்பாடுகள் தீவிரம்

நாளை வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்குவதில் எந்த தடையும் இல்லை என்றும், அதேவேளையில் பூத் சிலிப் என்ற பெயரில் பிரசாரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த வெளியூர்காரர்களும் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

Next Story