நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், பாதுகாப்பு பணிக்காக 97 ஆயிரத்து 882 காவலர்கள்
தமிழகத்தில் 12 ஆயிரத்து 604 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது
சென்னை,
தமிழகத்தில் 12 ஆயிரத்து 604 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.நகர்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு 97,882 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் .ஊர்க்காவலர் படையினர் ,முன்னாள் இராணுவத்தினர் என மொத்தம் 1.13 லட்சம் பேர் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .தேர்தல் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டால் தீர்வு காண 846 அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story