தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் கைது


தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 18 Feb 2022 3:12 AM IST (Updated: 18 Feb 2022 3:12 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் அதே ஊரை சேர்ந்த 17 வயது மாணவி 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.  பள்ளியில் தற்போது திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகின்றது. 

இந்த நிலையில் நேற்று பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மதுக்கூர் மாணவியிடம் பள்ளி ஆசிரியர் ராஜ்குமார்(வயது52) பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். 

ஆசிரியர் ராஜ்குமார் வரம்பு மீறுவதை மாணவி கண்டித்து உள்ளார். ஆனால் ராஜ்குமார் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இதில் மிகுந்த மன உளைச்சல் அடைந்த மாணவி கண்ணீருடன் வகுப்பறையை வீட்டு வெளியேறி உள்ளார். 

இது குறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரியர் ராஜ்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்யப்பட்டது 

பின்னர் பள்ளி ஆசிரியர் ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.



Next Story