2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் மூடப்படுகிறதா? - கல்வித்துறை விளக்கம்
2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் மூடப்படுகிறதா என்று வெளியான தகவலுக்கு பள்ள்க்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
அரசு அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் ஆண்டுதோறும் 52 ஆயிரத்து 933 குழந்தைகள் கல்வி பயில வழிவகை செய்யப்பட்டது.
இந்த நிலையில் அரசால் தொடங்கப்பட்ட அந்த 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் இருக்கும் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் மூடப்பட இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால, இது முற்றிலும் தவறான தகவல் என்று தொடக்கக்கல்வித் துறை தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக தொடக்கக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, '2 ஆயிரத்து 381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் மூடப்படாது. மூடப்படும் என்று வரும் தகவல் தவறானது.
அந்த வகுப்புகளை நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்களை அந்தந்த பணியிடங்களில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்' என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story