பிரபல ரவுடி சங்கரின் ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்
பிரபல ரவுடி சங்கரின் ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சென்னை,
காஞ்சீபுரத்தைச் சேர்ந்தவர் பிபிஜிடி சங்கர். இவருக்கு எதிராக கொலை, கொள்ளை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்பட 15 வழக்குகள் உள்ளன.
தமிழ்நாடு போலீசார் பதிவுசெய்த வழக்கின் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர் சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, பல்வேறு சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. மேலும் விசாரணையின் போது, சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகளின் பல்வேறு வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பினாமி பெயர்களில் சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள ரூ.25 கோடி மதிப்பிலான 79 சொத்துக்களை அமலாக்க துறை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.
இத்தகவலை சென்னை அமலாக்கத்துறை உதவி இயக்குனர், ஏ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story