மாணவர்களை ஏற்றி செல்ல மறுத்த அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்
வாணியம்பாடி அருகே மாணவர்களை ஏற்றி செல்ல மறுத்த அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜவ்வாது மலையில் 30-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளிக் கல்லூரி மாணவர்கள் ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடியில் படித்து வருகின்றனர்.
ஆனால் இந்த பகுதியாக செல்லும் அரசு பேருந்துகள் மாணவர்களை ஏற்றி செல்லதில்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் அரசு பேருந்தை மறித்து போட்டம் நடத்தினர்.
இவர்கள் ஆலங்காயம்- ஜமுனாமரத்தூர் சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டம் குறித்து அறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story