கொரோனா காலத்தில் அதிகரித்த இணை நோய்கள் - தனி கவனம் செலுத்த சுகாதாரத்துறை திட்டம்
இணை நோய்களை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை,
தேசிய சுகாதார பணிகள் கழகம் சார்பில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட மருத்துவமனை முதல்வர்கள், இயக்குனர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் மற்ற இணை நோயாளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது கொரோனா குறைந்து வருவதால் மற்ற இணை நோய்கள் மீது கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக புற்றுநோய், காசநோய், இதய கோளாறு, மனநல பாதிப்பு, தற்கொலை போன்றவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மார்பக புற்றுநோய் அதிகமாக உள்ளதாகவும், தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் ரசாயண சாணத்தை உட்கொண்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றை கட்டுப்படுத்த தேவையான திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story