பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டாலும், தைரியமாக போட்டியிட்டுள்ளோம்- நடிகை குஷ்பு


பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டாலும், தைரியமாக போட்டியிட்டுள்ளோம்- நடிகை குஷ்பு
x
தினத்தந்தி 19 Feb 2022 10:29 AM IST (Updated: 19 Feb 2022 10:29 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டாலும், தைரியமாக போட்டியிட்டுள்ளோம்- நடிகை குஷ்பு

சென்னை: 

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் நீண்ட வரிசையில் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு வாக்களித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

பொதுவாகவே மக்கள் எங்களுக்கு யாரும் பணியாற்றவில்லை, எங்களை யாருமே வந்து பார்க்கவில்லை என்று கூறுகின்றனர். எனவே மக்கள் வெளியே வந்து யாரை வெற்றிபெற செய்ய வேண்டும், யார் நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து நீங்கள் வாக்களிக்கும்போதுதான், தேர்வு செய்யப்பட்டவர்களால் உதவி செய்ய முன்வர முடியும். ஆனால், வாக்களிக்காமல் வீட்டிலேயே இருந்தால் நிச்சயமாக இது சாத்தியம் இல்லை.

வாக்களிப்பது ஜனநாயக கடமை மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. தயவுசெய்து வாக்களியுங்கள், நான் வாக்களித்துள்ளேன். பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுவது தவறில்லை, தைரியமாக போட்டியிட்டுள்ளோம். இந்த நேரத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து பேச முடியாது. பா.ஜ.க. சார்பிலும் தற்போது பேச முடியாது, தேர்தல் நடத்தை விதமீறலாகிவிடும்.

பா.ஜ.க.வுக்கும் நோட்டாவுக்கும் போட்டி என சொல்லி சொல்லியே ஏற்கெனவே 4 பேர் சட்டசபைக்கு சென்றுவிட்டனர். எனவே, நோட்டாவுடன் ஒப்பிட்டு பார்ப்பதை விட தமிழகத்தில் பா.ஜ.க. இல்லவே இல்லை என்று கூறி வந்தபோது நாங்கள் வெற்றி பெற்று வந்துள்ளோம். பா.ஜ.க. எத்தனையாவது இடம்பிடிக்கும் என்றெல்லாம் இப்போது எதுவும் கூறமாட்டேன் அப்படி கூறினால், அது தேர்தல் நடத்தை விதிமீறலாகிவிடும் என கூறினார்.

Next Story