வாக்காளர்களுக்கு திமுக பணம் கொடுப்பதாக பாஜக குற்றச்சாட்டு - வாக்குச்சாவடியை முற்றுகையிட்டதால் பரபரப்பு


வாக்காளர்களுக்கு திமுக பணம் கொடுப்பதாக பாஜக குற்றச்சாட்டு - வாக்குச்சாவடியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Feb 2022 10:43 AM IST (Updated: 19 Feb 2022 10:43 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு திமுக வினர் பணம் கொடுப்பதாக குற்றஞ்சாட்டி பாஜக தொண்டர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டுள்ளனர்.

கோவை, 

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறறு வருகின்றது. காலை முதலலே பொதுமக்கள், பிரபலங்கள் என்று பலர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில்  63-வது வார்டில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுப்பதாக கூறி வாக்கு பதிவு நடைபெறும் திருமண மண்டபத்தை பாஜக கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பான  சூழ்நிலை நிலவி வருகின்றது

Next Story