நடக்க முடியாத நிலையிலும் தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றிய 75 வயது மூதாட்டி..!
இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையிலும் 75 வயது மூதாட்டி வாக்களித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
கோவை,
கோவை மாவட்டம் பீளமேடு ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பட்டியம்மாள்(வயது75). இவர் கோவை பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச் சாவடிக்கு ஊர்ந்து சென்று வாக்களித்து உள்ளார்.
தேர்தலுக்கு தேர்தல் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இரண்டு கால்களும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி மூதாட்டி வந்து வாக்களித்த நிகழ்வு வாக்காளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளளது.
Related Tags :
Next Story