திருச்சி விமான நிலையத்தில் ரூ.66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Feb 2022 9:30 AM IST (Updated: 20 Feb 2022 9:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பயணியிடம் இருந்த ரூ.66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில்  பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த முகமது யூசுப்(வயது 48) என்ற பயணி தனது கைப்பையில் ரூ.66 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர் மலேசியன் ரிங்கிட் உட்பட வெளிநாட்டு பணகளை எடுத்துச் செல்ல இருந்தது தெரியவந்தது.

இந்த பணத்தினை எடுத்து செல்வதற்கு அவரிடம் எந்த ஆவணமும் இல்லாததால், சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் முகமது யூசுப்புக்கு இந்த வெளிநாட்டு பணம் எவ்வாறு கிடைத்தது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பணியின் ஒருவரிடம் இருந்து 66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story