சாலையில் சென்ற அரசு பஸ்சின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு: அதிர்ஷ்ட வசமமாக உயிர் தப்பிய 47 பயணிகள்...!
சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சின் சக்கரம் கழன்று ஓடியதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி உள்ளனர்.
பல்லடம்,
திருநெல்வேலியில் இருந்த 47 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து ஒன்று கோயம்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை காமராஜ்(வயது40), என்பவர் ஓட்டி வந்தார்.
பேருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வந்தபோது பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது. பேருந்தின் ஓட்டுனர் என்ன பேருந்தின் முன்பு சக்கரம் ஒன்று செல்கிறது என்று பார்த்து உள்ளார். அப்போது பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்த போதுதான் கழன்று ஓடியது நம்ம பேருந்தின் சக்கரம் என்பதை டிரைவர் அறிந்து உள்ளார்.
பின்னர் பேருந்தை சாமர்த்தியமாக ஓட்டி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நகர்த்தி வந்த டிரைவர், சாலையோரம் நின்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி பேருந்தை நிறுத்தினார்.
இந்த விபத்தில் பேருந்து டிரைவர் காமராஜின் சாமர்த்தியத்தால் பேருந்தில் இருந்த 47 பணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி உள்ளனர் என்று பயணிகள் தெரிவித்துள உள்ளனர்.
இந்த விபத்து குறித்த பயணிகள் கூறுகையில்,
அரசு பேருந்துகளின் பராமரிப்பு பணி மிக மோசமாக உள்ளதால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்துவருகின்றது. டிரைவரின் சாமர்த்தியத்தால் நாங்கள அனைவரும் உயிர் தப்பினோம். இது போன்ற விபத்துகள் இனி நடக்காத அளிவிற்கு போக்குவரத்து கழகம் பார்த்து கொள்வேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story