திருமங்கலத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நாளை விடுமுறை


திருமங்கலத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நாளை விடுமுறை
x
தினத்தந்தி 20 Feb 2022 6:24 PM IST (Updated: 20 Feb 2022 6:24 PM IST)
t-max-icont-min-icon

திருமங்கலத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன் படி மதுரை திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 17 W-ல் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மறு வாக்குப்பதிவு வாக்குச்சாவடிகளில் வாக்காளரின் இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், திருமங்கலத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நாளை விடுமுறை அளித்து மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Next Story