சென்னையின் நாளை வாக்குப்பதிவு நடக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை- ககன்தீப் சிங் பேடி தகவல்


சென்னையின் நாளை வாக்குப்பதிவு நடக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை- ககன்தீப் சிங் பேடி தகவல்
x
தினத்தந்தி 20 Feb 2022 7:50 PM IST (Updated: 20 Feb 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி அமைந்துள்ள 2 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சியின் வார்டு 51-க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 1,174 மற்றும் வார்டு 179-க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 5,059-க்கும்  நாளை (திங்கட்கிழமை) மறுவாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ள 2 பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியின் வார்டு 51-க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 1,174 மற்றும் வார்டு 179-க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 5,059- க்கும்    நாளை மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது. 

இதையடுத்து இந்த 2 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையில் உள்ள சென்னை உருது பள்ளி மற்றும் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Next Story