தமிழகத்தில் நாளை வழக்கம்போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை


தமிழகத்தில் நாளை வழக்கம்போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை
x
தினத்தந்தி 20 Feb 2022 8:50 PM IST (Updated: 20 Feb 2022 8:51 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நாளை வழக்கம்போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது. மாநிலம் முழுவதும் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னை மாநகராட்சியில் 43.59சதவீதமே ஓட்டுகள் பதிவானது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை (திங்கட்கிழமை) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை வழக்கம்போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற பள்ளிகள் அனைத்து வழக்கம்போல்  செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Next Story