முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்..!
முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 27-ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 28-ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. அத்துடன் 30-ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியே நடைபெற்றது
இதையடுத்து மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என மருத்துவ கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்திருந்தது. அதன்படி, மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா பரவல் தடுப்பு விதிகள் பின்பற்றப்பட்டு, மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.
மேலும் முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் பிப்.18 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு அறிவித்திருந்தார். இந்த நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் நிறைவடைகிறது.
Related Tags :
Next Story