பாலம் சீரமைக்கும் பணி - சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்


பாலம் சீரமைக்கும் பணி - சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
x
தினத்தந்தி 21 Feb 2022 1:27 PM IST (Updated: 21 Feb 2022 1:27 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் இருக்குன்றம்பள்ளி - மாமண்டூர் இடையே உள்ள பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் இருக்குன்றம்பள்ளி மாமண்டூர் இடையே உள்ள பழமைவாய்ந்த பாலத்தில் சில இடங்களில் விரிசல் விழுந்துள்ளது.

 இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

பாலம் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருவதால் திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சுமார்  3 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். 

இந்த நிலையில் போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை சீராக அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில மணி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் சரியாகும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story