மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு


மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு
x
தினத்தந்தி 21 Feb 2022 9:21 PM IST (Updated: 21 Feb 2022 9:21 PM IST)
t-max-icont-min-icon

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடந்த மாதம் 29-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானது. 

இதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து குணமடைந்த வைகோ சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், வைகோ-வை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டிற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட இயக்கப் போர்வாளாக விளங்கும் அண்ணன் வைகோ கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். கொள்கை மறவராக விளங்கும் அவரது பொதுவாழ்வு மேலும் சிறக்க விழைகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story