சென்னை,கடலூர்: வாக்குப்பெட்டிகள் இருக்கும் அறையின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்!


சென்னை,கடலூர்: வாக்குப்பெட்டிகள் இருக்கும் அறையின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்!
x
தினத்தந்தி 22 Feb 2022 8:41 AM IST (Updated: 22 Feb 2022 8:45 AM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால் கடலூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னை,

கடலூர் மாவட்டம்  மஞ்சகுப்பம் புனித வளனார் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது. அங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால் கடலூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக, வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள  அறையின் முன் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் காத்திருந்தனர். பின்னர் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

அதேபோல, விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி பேரூராட்சிக்கான தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தாமதமாக தொடங்கியது.   தபால் ஓட்டுப்பெட்டியின் சாவி இல்லாததால்  முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டது.

அதன்பின் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல, சென்னை சோழிங்கநல்லூர் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால் கடலூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.பின்னர் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

Next Story