தபால் ஓட்டில் முரண்பாடு: வாக்கு எண்ணும் மையத்தில் எதிர்க்கட்சியினர் தர்ணா


தபால் ஓட்டில் முரண்பாடு: வாக்கு எண்ணும் மையத்தில் எதிர்க்கட்சியினர் தர்ணா
x
தினத்தந்தி 23 Feb 2022 1:15 AM IST (Updated: 23 Feb 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

தபால் ஓட்டில் முரண்பாடு: வாக்கு எண்ணும் மையத்தில் எதிர்க்கட்சியினர் தர்ணா.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை மாநகராட்சி 45-வது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அப்போது எதிர்க்கட்சி முகவர்கள் இல்லாத நேரத்தில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணி முடித்த பின்னர் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திர வாக்குகளை எண்ணியபோது 45-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கோபிநாத் மற்றவர்களை விட ஆயிரக்கணக்கில் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இதேபோன்று 37-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெ.டில்லிபாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 3 வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்த வரிசை எண்ணுக்கும், பேலட் வரிசை எண்ணுக்கும் வித்தியாசம் இருந்ததாக புகார் தெரிவித்து மற்ற வேட்பாளர்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அவர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்தனர்.


Next Story