மாங்குரோவ் காடுகளை மீண்டும் அமைக்க பரிந்துரைக்காதது ஏன்? தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
மாங்குரோவ் காடுகளை மீண்டும் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யாதது ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
கடலூர் மாவட்டம், பிச்சாவரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சொதிக்குப்பம் கிராமத்தில், உப்பனாறு கரையில் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மாங்குரோவ் காடுகள் முன்பு அமைக்கப்பட்டது. தானே புயலிலும், 2015-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்திலும் இந்த மாங்குரோவ் காடுகள் அழிந்துவிட்டது. 2015-ம் ஆண்டு வெள்ளபாதிப்புகள் நேரில் ஆய்வு செய்த மத்திய அரசின் நிபுணர்கள் குழு அறிக்கையின் அடிப்படையில், இந்த காடுகளை மீண்டும் உருவாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியது.
ஆபத்து
ஆனால் இதுகுறித்த திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுப்பவில்லை. எனவே, அப்பகுதியில் மாங்குரோவ் காடுகளை மீண்டும் உருவாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். மாங்குரோவ் காடுகளை மீண்டும் வளர்க்காவிட்டால், சுற்றுச்சூழலுக்கும், பறவைகளுக்கும் ஆபத்து ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
நிலைப்பாடு
இதையடுத்து நீதிபதிகள், மத்திய அரசு நிதி ஒதுக்கியும், தமிழ்நாடு அரசு திட்டத்தை ஏன் பரிந்துரைக்கவில்லை? இதற்கான காரணத்துடன் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story