தாமரைக்கு வாக்களித்து பெருமை சேர்த்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை


தாமரைக்கு வாக்களித்து பெருமை சேர்த்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை
x
தினத்தந்தி 24 Feb 2022 12:27 AM IST (Updated: 24 Feb 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

தாமரைக்கு வாக்களித்து பெருமை சேர்த்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. கணிசமான இடங்களை பிடித்துள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து, பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி பிரதிநிதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களுடைய வெற்றிக்காக பணியாற்றிய மாவட்ட தலைவர்கள், கட்சியின் பொறுப்பாளர்கள், பா.ஜ.க.வின் தொண்டர்கள் என ஒவ்வொருவரின் அயராத உழைப்புக்கும் கிடைத்த வெகுமதி, இந்த வெற்றி. தொடர்ச்சியாக பிரசாரத்தில் ஈடுபட்டு, தாமரை சொந்தங்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தந்த மாநில தலைவர் கே.அண்ணாமலைக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.ஜ.க.வின் வேண்டுகோளை ஏற்று, இந்த தேர்தலில் தாமரைக்கு வாக்களித்து பெருமை சேர்த்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி. தொடர்ந்து தொய்வின்றி பணியாற்றுவோம். பிரதமர் மோடியின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்போம். அதன்மூலம் வரும் காலக்கட்டங்களில் இன்னும் பல மகத்தான வெற்றிகளை காண்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story