ஜாமீன் மனு நிராகரிப்பு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கில் கைது
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை,
சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தபோது கள்ள ஓட்டு பிரச்சினை தொடர்பாக தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே பிரச்சினை எழுந்தது.
அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர், தி.மு.க. தொண்டர் நரேஷ்குமார் என்பவரை பிடித்தனர். பின்னர் அவரது சட்டையை கழற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
ஜெயக்குமார் கைது
இந்தநிலையில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்ந்த நரேஷ்குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் 40 பேர் தன்னை தாக்கியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், கடந்த 21-ந் தேதி இரவு ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லியில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.
மற்றொரு வழக்கு
இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ராயபுரம் போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். ஓட்டுப்பதிவு அன்று ஜெயக்குமார் ராயபுரம் தண்ணீர் தொட்டி பகுதியில் ஜி.ஏ.ரோட்டில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு காரில் சென்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரது காரை தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும், அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களுடன் அதே பகுதியில் மறியலில் ஈடுபட்டார். போலீசாரின் சமாதானத்திற்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றார்.
தற்போது இந்த மறியல் தொடர்பாக ராயபுரம் போலீசார், ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூட்டம் கூடுதல், பெருந்தொற்று காலத்தில் நோய் பரப்பும் விதமாக கூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசாருக்கு எதிராக கோஷம்
இந்த வழக்கில் ஜெயக்குமாரை கைது செய்து இருப்பதாக பூந்தமல்லி சிறை அதிகாரிகளிடம் தெரிவித்த ராயபுரம் போலீசார் நேற்று அவரை போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.
இதை அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கோர்ட்டில் குவிந்தனர். ஜெயக்குமாரை போலீசார் அழைத்து வந்தபோது அ.தி.மு.க.வினர் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
மீண்டும் சிறையில் அடைப்பு
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயக்குமாரை அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு தயாளன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே தி.மு.க. தொண்டரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
கொலை முயற்சி வழக்கு
இந்த மனு மீதான விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஜெயக்குமார் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள சட்டப்பிரிவுடன் தற்போது கொலை முயற்சி வழக்கும் சேர்த்து பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார்தாரரை சட்டையை கழற்றி அழைத்து வந்தது தொடர்பான வீடியோ பதிவை ஜெயக்குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதால் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அதுதொடர்பான சட்டப்பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது' என்றார்.
ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல், 'புகார்தாரருக்கு எந்த காயமும் இல்லை. கொலை மிரட்டலுக்கான முகாந்திரமே இல்லாதபோது கொலை முயற்சி என எப்படி வழக்குப்பதிய முடியும். கள்ள ஓட்டு பிரச்சினையில் புகார்தாரரை பிடித்து பத்திரமாக போலீசில் ஒப்படைத்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயக்குமார் முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று வாதாடினார்.
புகார்தாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சாதாரண ஒருவர் இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடுவதற்கும், முன்னாள் அமைச்சர், சபாநாயகராக இருந்த ஒருவர் இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது' என்றார்.
ஜாமீன் மனு தள்ளுபடி
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
அதேவேளையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புழல் சிறைக்கு மாற்றம்
இதற்கிடையே, நேற்று மாலை திடீரென பூந்தமல்லி தனி கிளை சிறை வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதைத்தொடர்ந்து புழல் சிறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

Related Tags :
Next Story