செங்கோட்டை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் ரத்து


செங்கோட்டை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் ரத்து
x
தினத்தந்தி 24 Feb 2022 5:36 AM IST (Updated: 24 Feb 2022 5:36 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

நெல்லை,

தென் மாவட்டங்களில் இரட்டை ரெயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட புனலூர்-கொல்லம் ரெயில்வே பாதையில் மின்மயமாக்கல் பணி தற்போது நடந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த பணிகளை விரைவாக நடத்திடும் வகையில் செங்கோட்டை-கொல்லம், கொல்லம்- செங்கோட்டை சிறப்பு ரெயில்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் மார்ச் மாதம் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Next Story