தூத்துக்குடி: துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி


தூத்துக்குடி: துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
x
தினத்தந்தி 24 Feb 2022 3:29 PM IST (Updated: 24 Feb 2022 3:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர், துறையூர் விரைந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் தங்கவேல், கண்ணன், ராமர், ஜெயராஜ், ஆகியோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story