கஞ்சாவுடன் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது


கஞ்சாவுடன் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2022 11:22 PM IST (Updated: 24 Feb 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கஞ்சா பொட்டலங்களுடன் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

 மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் போலீசார் சாத்தமங்கலம் மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் 3 கஞ்சா பொட்டல்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சாத்தமங்கலத்தை சேர்ந்த வசந்த் என்ற வசந்தராஜா (வயது 25), சென்னை மதுரவாயலை சேர்ந்த செல்வா (25) என்பது தெரியவந்தது. கல்லூரி மாணவரான வசந்த், செல்வாவிடம் கஞ்சா வாங்க வந்தபோது போலீசாரிடம் சிக்கி கொண்டார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள், 2 செல்போன்கள், ரூ.7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story