உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்


உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்
x
தினத்தந்தி 25 Feb 2022 12:18 AM IST (Updated: 25 Feb 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் மத்திய அரசுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், அங்குள்ள தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாணவர்கள் பல இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். ரஷியா விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பெய்து வரும் நிலையில், இந்திய மாணவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் ரெயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

உக்ரைன் போருக்கு முன்பே இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வந்திருக்க வேண்டும். ஆனால், மீட்பு நடவடிக்கையை தாமதமாக தொடங்கியதால் சில நூறு இந்தியர்களை மட்டுமே மீட்க முடிந்தது. உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகத்தில் இருந்து உதவி கிடைக்கவில்லை.

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகள் தூதரகம் மூலமாக வழங்கப்பட வேண்டும். மாற்று வழிகளை ஆராய்ந்து உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story