பர்னிச்சர் கடையில் தீ விபத்து; ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்...
பர்னிச்சர் கடையில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து உள்ளது.
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கில்முருங்கை பகுதியை சேர்ந்தவர் தரணீஸ்வரன். இவர் வடபுதுப்பட்டி பகுதியில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகின்றார்.
தரணீஸ்வரன் நேற்று இரவு கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு பூட்டிய கடைக்குள் இருந்து புகைவருவதாக அப்பகுதி மக்கள் தரணீஸ்வரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த அவர், பதறிக் கொண்டு கடைக்கு ஓடிவந்தார். கடைக்குள் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்த அவர், அப்பகுதி மக்களின் உதவியோடு தீயை அணைக்க முயன்றார். ஆனால் அதற்குள் கடைக்குள் இருந்த 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இது குறித்து தரணீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Related Tags :
Next Story