மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்துங்கள்: உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களின் பெற்றோர் கண்ணீர்
உக்ரைனில் படிக்கும் தமிழக மாணவர்களின் நிலையை எண்ணி அவர்களின் பெற்றோர் கண்ணீர் கடலில் மிதக்கிறார்கள்.
சென்னை,
உக்ரைனில் போர் மூண்டுள்ள நிலையில் அங்கு சிக்கியிருக்கும் தமிழக மாணவர்கள் உணவு, உறக்கம் இன்றி பாதுகாப்பற்ற நிலையில் இருந்து தவித்து வருகிறார்கள். அவர்களின் நிலையை எண்ணி தமிழகத்தில் வாழும் அவர்களின் பெற்றோர் கண்ணீர் சிந்தி வருகிறார்கள். மற்றொருபுறம் மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு துரிதமாக ஈடுபட்டு வருகிறது.
உக்ரைனில் தவிக்கும் தனது மகனை மீட்டு தரும்படி ஆவடியை சேர்ந்த பெண் கிரிஜா சுடர்மணி வேண்டுகோள் விடுத்து கூறியதாவது:-
என்னுடைய மகன் பிரகாஷ் 3 மாதத்திற்கு முன்பு தான் உக்ரைனுக்கு மருத்துவ படிப்பு படிக்க சென்று இருக்கிறான். போர் குறித்த அறிவிப்பையும், குண்டு வெடிப்பு காட்சிகளை பார்த்த போது அவனிடம் தொடர்பு கொண்டேன். அப்போது என் மகன் என்னிடம், “கவலைப்படாதீர்கள் அம்மா, நான் பத்திரமாக இருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறான். நிலைமை அங்கு எப்படி இருக்கு என்று தெரியவில்லை. மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து என் மகனை மீட்டு தர வேண்டும். முதல்-அமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை மாணவர்கள்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தங்களது மகன்களை மீட்டு தரும்படி கபில்நாத், தீபன் சக்கரவர்த்தி ஆகிய மாணவர்களின் பெற்றோர் மதுரை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். கபில்நாத், தீபன் சக்கரவர்த்தி ஆகிய 2 மாணவர்களும் உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்குதற்கு முன்பாகவே, ஊர் திரும்ப விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் அங்கு போர் மூண்டதால் விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது. அதனால் இருவரும் சொந்த ஊர் திரும்ப வழியின்றி தவித்து வருகின்றனர். இது அவர்களின் பெற்றோரை தவிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து கபில்நாத் பெற்றோர் கூறும்போது, ‘எங்கள் மகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். உக்ரைன் நாட்டில் ரஷியா குண்டு மழை பொழிந்து வருகிறது. உயிர் பிழைப்பதற்காக பதுங்கு குழிகளில் தங்கி உள்ளோம். எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கூறுகிறான். எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு என்னுடைய மகன் நாடு திரும்ப உதவி செய்ய வேண்டும்' என்றனர்.
தேனியை சேர்ந்த ரோகித்குமார் உக்ரைனில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். அவரும் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலையில் அவரது தந்தை சரவணன் கூறும்போது, ‘4 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வந்தான். இப்போது நலமாக இருக்கிறானா என்று தெரியவில்லை. நெஞ்சம் பதைபதைக்கிறது என் மகனையும், அவனுடன் இருக்கும் தமிழ் மாணவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
நெல்லை-திருச்சி
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த தம்பதிகளான சேகர், செல்வின் மற்றும் துரை, அமுதா ஆகியோரின் மகன்கள் உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்க்கியூவில் மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், போர் தொடங்கியுள்ளதால் அவர்களை பத்திரமாக தமிழகத்துக்கு அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கீழமுல்லகுடி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் டெர்ணபுள் பகுதியில் பொறியியல் படித்து வருகிறார். திருச்சி நெ.1 டோல்கேட் திருவள்ளுவர் அவென்யூ பகுதியை சேர்ந்த சேவியர்-மேகலா தம்பதியின் மகன் சந்தோஷ் சுசிர் லாட்டிமர் (வயது 23). இவர் உக்ரைனில் பி.இ. இறுதியாண்டு படித்துவருகிறார். இந்த மாணவர்களை இந்தியா அழைத்து வருமாறு அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த முத்தமிழன் என்பவர் உக்ரைன் நாட்டின் வினிட்சியா நகரில் உள்ள லுகன்ஸ்க் மாகாண மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில், அவரை பத்திரமாக இந்தியா அழைத்து வருமாறு பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாப்பாடு கொடுத்து...
ஈரோட்டை சேர்ந்த 4 மாணவர்கள் உக்ரைனுக்கு சென்றுள்ளனர். அதில் பொன்னர் பாலாஜியின் பெற்றோர், ‘குண்டு போடுறதா சொல்லுறாங்க...எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கு. சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறாங்க. சாப்பாடு கொடுத்து பத்திரமா கொண்டு வந்து சேத்துருங்க' என்று கண்களில் வழியும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.
கொடைக்கானல் மாணவி அனுசியா
கொடைக்கானலை சேர்ந்த அனுசியா உக்ரைனில் மருத்துவம் படித்து வருகிறார். அவரின் நிலை குறித்து அவரது சகோதரி சிந்தியா கூறும்போது, ‘அனுசியாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது பாதுகாப்பை உறுதி செய்து, எனது சகோதரியை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
பெரம்பலூர் மாணவர்கள்
பெரம்பலூர் மாவட்டம், அரணாரையை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தத்தின் மகன் கிருபா சங்கர் (வயது 21), சிறுவாச்சூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமாரின் மகன் நவநீதகிருஷ்ணன் (22), பெரம்பலூரை சேர்ந்த அருண், ரோகித், ரத்தீஷ், சவுமியா உள்ளிட்ட 10 பேர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நகரில் தங்கி அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். இவர்களை மீட்டு அழைத்து வர அவர்களது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த முகமது சையத் அஸ்ராரி, அலீம், ஹாசிம்கான் ஆகிய 3 மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த சரவணன் (23) உக்ரைனில் குண்டு மழை பொழிவுக்கு இடையே சிக்கி தவித்து வருகிறார். இவர் உக்ரைன் டணிப்ரோபெட்ரோவ்ஸ்க் மருத்துவக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருடைய தந்தை சேகர் விவசாயி ஆவார்.
இந்தநிலையில் தனது ஒரே மகனான சரவணன் உக்ரைனில் சிக்கி தவிப்பதை எண்ணி சேகர் மற்றும் அவருடைய உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர்கள் எப்படியாவது சரவணனை பத்திரமாக மீட்டு வர மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்ட மாணவர்கள்
உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த கேசவ பெருமாள் என்பவருடைய மகன் கிருத்திக் ரோஷன்( 19), மருமகன் விவேக் ஆதித்யா(19) மற்றும் குளச்சல், மார்த்தாண்டம், ராஜாவூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 21 மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர்.
உக்ரைனில் தவித்து வரும் புதுச்சேரி மாணவர்கள் 8 பேரை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பாதாளத்தில்...
இதற்கிடையே, உக்ரைனில் இருந்து மாணவி பார்கவி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது:-
நான் மருத்துவம் படிக்கிறேன். ரொம்பவே அதிர்ச்சியாகவே இருக்கிறோம். இப்போது ஓரளவுக்கு பரவாயில்லை. மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எல்லையில் தான் பதற்றம் இருக்கிறது. இந்திய தூதரகம் எங்களை அழைத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கடைகளுக்கு சென்றால் பல மணி நேரம் கழித்துதான் வர முடியும். வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டால் பாதாள அறையில் தங்க வேண்டியிருக்கிறது. எல்லா வீடுகளிலும் பாதாள அறை உண்டு. இந்தியாவின் இருக்கும் பெற்றோர் யாரும் பதற்றப்படாதீர்கள். எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி வீடியோ பதிவு
இதேபோல் பழனி அருகே அழகாபுரியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் மவுனிகா (24). கீவ்வில் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
அவர் தனது செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ ஒன்றை பதிவு செய்து பெற்றோருக்கு அனுப்பி இருந்தார். அதில் உக்ரைனில் கடந்த ஒரு வாரமாக போர் தீவிரம் அடைந்திருப்பதால், நாங்கள் கீவ் அருகே உள்ள ஒரு நகரில் தஞ்சம் அடைந்துள்ளோம். மிகுந்த பயத்தில் உள்ளோம். எனவே எங்களை எப்படியாவது இந்தியாவுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதாள அறையில் தஞ்சம்
கீவ்வில் 5-ம் ஆண்டு மருத்துவம் படிக்கும் பழனியை சேர்ந்த ராகுல்கண்ணன் (23), முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மாணவி ஷேலே (19), 4-ம் ஆண்டு மருத்துவம் படிக்கும் ராஜ்சந்தர், 2-ம் ஆண்டு மருத்துவம் படிக்கும் காவலப்பட்டியை சேர்ந்த மிதுன் (20). 3-ம் ஆண்டு மருத்துவம் படிக்கும்
ஆயக்குடியை சேர்ந்த நிரஞ்சன் ஆகியோர் பாதாள அறையில் பதுங்கி இருப்பதாக அவர்களது பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story