தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய ஓ.பன்னீர்செல்வம் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு


தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய ஓ.பன்னீர்செல்வம் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 26 Feb 2022 4:29 AM IST (Updated: 26 Feb 2022 4:29 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய ஓ.பன்னீர்செல்வம் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நடந்தபோது, போடியநாயக்கனூர் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இதை எதிர்த்து அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் வேட்பு மனுவில், ஏராளமான குறைபாடுகள் உள்ளன. அவர் கடன் மதிப்பை குறைத்து காட்டியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாககல் செய்யப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வக்கீல், வேட்புமனுவில் எதையும் மறைக்கவில்லை. கோர்ட்டு நேரத்தை வீணடிக்க இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்று வாதிட்டார். மிலானி தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

வேட்புமனுவில் ஓ.பன்னீர்செல்வம் தகவலை மறைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மனைவி பெயரில் உள்ள பங்களாவைப் பற்றிய தகவலை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Next Story