உக்ரைனில் சிக்கி உள்ள மேட்டூர் மாணவர் கார்திக்


உக்ரைனில் சிக்கி உள்ள மேட்டூர் மாணவர் கார்திக்
x
தினத்தந்தி 26 Feb 2022 12:15 PM IST (Updated: 26 Feb 2022 12:15 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கி உள்ள மேட்டூர் மாணவர் கார்திக்கை மீட்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சேலம்,

உக்ரைனை கைப்பற்ற  நினைக்கும் ரஷ்யா அந்த நாட்டின் மீதான தாக்குதலை அதிகரித்து வருகின்றது.  இதனால் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். உக்ரைனில் வேலை மற்றம் கல்விக்காக இந்தியவை சேர்ந்த 20 ஆயிரம் பேர் வசித்துவருகின்றனர். இவர்களில் தமிழக்தை சேர்ந்தவர்கள் மடுட்டும் சுமார் 5 ஆயிரம்  பேர் ஆவார்கள். 

இந்த மாணவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் பெற்றோர்கள் பதறி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு உள்ள மாணவர்கள் தங்களை உடனடியா மீட்டு செல்ல நடவடிக்கை எடுங்கள் என்று தங்கள் பெற்றோரிடம் தெரித்தும் வருகின்றனர்.

இது போன்று சேலம் மாவட்டம் மேட்டூர் கோன் உரை சேர்ந்த கார்த்திக் என்பவர் உக்ரைனில் மருத்துவம் படிப்பு படித்து வருகின்றார். கார்திக் தனது பெற்றோரை போனில் தொடர்பு கொண்ட விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story