சைக்கிளில் வந்த திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு...!
திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு சைக்களில் வந்து ஆய்வு செய்துள்ளார்.
வடமதுரை,
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் குற்றச் சம்பவங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
இந்த நிலையில் சாதாரண உடையை அணிந்து கொண்டு காலை 7 மணி அளவில் திண்டுக்கல்லில் இருந்து கிளம்பிய சூப்பிரண்டு சீனிவாசன் 18 கீலோ மீட்டர் பயணம் செய்து வடமதுரையில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.
அங்கு போலீஸ் நிலையம் மற்றும் மகளிர் போலீஸ் நிலையத்தில் உள்ள முக்கிய கோப்புகள் மற்றும் போலீசாரின் வருகைப்பதிவேடு போன்ற ஆவணங்களை ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை முறையாக நிறுத்தும்படி பணியில் இருந்த போலீசாருக்கு அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைக்கிளில் வந்து ஆய்வு செய்த நிகழ்வு போலீசார் மத்தியில் வியப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story