போதை பொருள் கொடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை: 4 பேர் கைது...!


போதை பொருள் கொடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை: 4 பேர் கைது...!
x
தினத்தந்தி 28 Feb 2022 11:19 AM IST (Updated: 28 Feb 2022 11:19 AM IST)
t-max-icont-min-icon

போதை பொருள் கொடுத்து 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போரூர்,

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த தம்பதிக்கு 13 வயது மகள் ஒருவர் உள்ளார்.இவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கும் ராமாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒரு இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. 

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாணவியை ஆசை வார்த்தை கூறிய அந்த இளைஞர், அவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு வந்த மாணவிக்கு போதை பொருள் கொடுத்து மயக்கம் அடைய செய்தார். பின்னர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இந்த நிலையில் மாணவி கடந்த சில நாட்களாக சோர்வாக இருந்துள்ளார். இது குறித்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பின்னர் இந்த சம்பவ தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் நேற்று இரவு 4 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,

போதை பொருள் கொடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை கைது செய்து உள்ளோம். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு  உள்ளதா என்றும் தீவிர விசாரணை நடத்து வருகின்றது என்று தெரிவித்தனர்.


Next Story